Videos | வீடியோக்கள்
தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய ப்ளூ சட்டை மாறன்.. வெளியான ஆன்டி இண்டியன் மோஷன் போஸ்டர்
இவ்வளவு நாட்களாக தமிழ் சினிமாவில் வெளியான அனைத்து படங்களையும் குறை சொல்லிக் கொண்டிருந்தவர் தான் ப்ளூ சட்டை மாறன். தன்னுடைய யூடியூப் சேனல் பக்கத்தில் விமர்சனம் என்ற பெயரில் பெரிய நடிகர்களின் படங்களை குறி வைத்து தாக்கி பேசிவருவார்.
இவர் பாரபட்சம் பார்க்காமல் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களையும் விமர்சித்து விடுவதால் பெரும்பாலும் இவருக்கு தனிப்பட்ட பிரச்சினை வந்ததில்லை. இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் புகைச்சல் இருந்துகொண்டே இருக்கிறது.
அதை வெளிக்காட்ட நேரமும் வந்துவிட்டது. இவ்வளவு நாட்களாக தமிழ் சினிமாவை இப்படி எடுக்க வேண்டும் அப்படி எடுக்க வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்த ப்ளூ சட்டை மாறன் முதன்முதலாக ஆன்டி இண்டியன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
அரசியல் சார்ந்த சாட்டையடி படமாக இந்த படம் உருவாகியிருக்கிறது என ஏற்கனவே கருத்துக்கள் வெளியான நிலையில் தற்போது ஆன்டி இண்டியன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அந்த போஸ்டரில் ஹிந்து, கிறிஸ்டியன், முஸ்லிம் என அனைத்து குறியீடுகளும் இருப்பதால் படம் கண்டிப்பாக இந்திய அரசியலைப் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதைவிட முக்கியமாக பார்ப்பது ப்ளூ சட்டை மாறன் அவருக்கு அவரே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளது தான்.
இதுவரை தமிழ் சினிமாவை விமர்சித்து கொண்டிருந்தபோது ப்ளூ சட்டை மாறன் எப்படி படம் எடுத்திருக்கிறார் என்பதைப் பார்த்து அவரது படத்திற்கு விமர்சனம் சொல்ல பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். நம்ம டி ஆர் மாதிரி கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை என அனைத்துமே ப்ளூ சட்டை மாறன் தான்.
