2 குடிகாரங்க பேசுறத குடிக்காதவன் கேட்கிறது ரொம்ப கொடுமை.. மெய்யழகன் கார்த்தி மண்டையில் குட்டிய ப்ளூ சட்டை

Blue Sattai Maran: பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரன், ஸ்ரீதிவ்யா என பலர் நடித்திருந்த மெய்யழகன் நேற்று திரைக்கு வந்தது. இதற்கு சினிமா விமர்சகர்கள் பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து பாராட்டி வருகின்றனர்.

ஆனால் வழக்கம் போல ப்ளூ சட்டை மாறன் இப்படத்தை கழுவி ஊற்றியுள்ளார். அதிலும் போற போக்கில் லியோ படத்தையும் இழுத்து வச்சு செய்திருக்கிறார். உலகத்தில் அன்புக்கு இணை எதுவும் கிடையாது என்பதுதான் படத்தின் மையக்கரு.

அதைப்பற்றி குறிப்பிட்டுள்ள ப்ளூ சட்டை கார்த்தி யார் என்றே தெரியாமல் அரவிந்த்சாமி பழகுவார். அவர் பெயர் என்ன என கண்டுபிடிக்க அவர் முயற்சி செய்யும் போது நமக்கும் ஒரு ஆர்வம் ஏற்படுகிறது.

ஆனால் இரண்டாம் பாதியில் கார்த்தி என் அண்ணன் பெயர் மதி அழகன் என குறிப்பு கொடுப்பார். அப்போதும் கூட அவர் பெயரை கண்டுபிடிக்க முடியாமல் அவர் திணறுவது லாஜிக் ஓட்டை. இது எப்படி இருக்கிறது என்றால் லியோ படத்தில் விஜய் பெயர் லியோ என பார்ப்பவர்களுக்கு தெரியும்.

கார்த்தியை கிண்டல் அடித்த ப்ளூ சட்டை

அதேபோல் அனிருத் வேறு தன் பங்குக்கு லியோ லியோ என கத்திக் கொண்டிருப்பார். அதையும் தாண்டி வில்லன் கோஷ்டி நீதானே லியோ என கேட்கும் போது வரும் கடுப்புதான் மெய்யழகன் படத்தை பார்க்கும் போதும் தோன்றுகிறது.

அதிலும் இரண்டு குடிகாரர்கள் பேசுவதை குடிக்காதவன் கேட்பது உலகத்திலேயே ரொம்ப கொடுமையான விஷயம் என மரண கலாய் கலாய்த்து உள்ளார். மேலும் படத்தை சுருக்கமாக முடிக்காமல் கிளைமாக்ஸ் வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ஆக மொத்தம் முதல் பாதி நன்றாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் கிரிஞ்சான காட்சிகள் நிறைய இருந்ததால் சொதப்பி விட்டது. என் வாழ்க்கையே ட்ராமா மாதிரி தான் போகுது. அதனால் எனக்கு கலர்ஃபுல்லாக படம் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த படம் சூர மொக்கையாக இருக்கும் என முடித்துள்ளார்.

மெய்யழகனை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்

- Advertisement -spot_img

Trending News