கருவாடுக்கு பூனை காவலா.? அர்ஜுன் பேச்சுக்கு ப்ளூ சட்டை கமெண்ட்

Arjun: இப்போது கேரளா சினிமாவையே கிடுகிடுக்கும் அளவுக்கு ஹேமா கமிட்டியின் அறிக்கை தான் பேசு பொருளாக மாறி இருக்கிறது. மலையாளத்தில் உள்ள பெரிய நடிகர்கள் முதல் பல பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் சிக்கி இருக்கின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் உள்ள ஹீரோக்களான விஷால், அர்ஜுன் போன்ற பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆக்சன் கிங் அர்ஜுன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது சில விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

அதாவது உலகில் எல்லா இடங்களிலுமே பெண்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் இருந்து வருகிறது. ஆகையால் எல்லா இடங்களிலும் ஹீரோக்கள் சென்று காப்பாற்ற முடியாது, அனைவருக்கும் பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்று அர்ஜுன் குறிப்பிட்டிருந்தார்.

அர்ஜுன் பேச்சுக்கு ப்ளூ சட்டை கமெண்ட்

கருவாட்டுக்கு பூனை காவலா என்ற பழமொழி போல் தான் அர்ஜுன் சொல்வது இருக்கிறது. அதாவது நடிகைகளை காப்பாற்ற சொல்றதே ஹீரோக்கள் கிட்ட இருந்து தான் சார் என்று ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட் செய்துள்ளார்.

blue-sattai-maran
blue-sattai-maran

அதாவது மலையாள சினிமாவில் மோகன்லால் உட்பட பெரிய நடிகர்களின் பெயர்கள் தான் இப்போது இந்த குற்றச்சாட்டுகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. தமிழில் ராதிகா போன்ற சில நடிகைகளும் தாங்கள் பார்த்த இன்னல்களை கூறிவருகிறார்கள்.

இந்த சூழலில் அர்ஜுன் ஹீரோக்கள் தான் எல்லோரையும் காப்பாற்றுகிறார்கள் என்று சொன்னது வேடிக்கையாக இருப்பதாக ப்ளூ சட்டையின் கமென்ட் இருக்கிறது. மேலும் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இன்னும் என்னென்ன விஷயங்கள் வெளியில் வரப்போகிறதோ.

அதிரும் மலையாள சினிமா

Next Story

- Advertisement -