ப்ளூ சட்டையிடம் சிக்கி சின்னா பின்னமான ரோமியோ விஜய் ஆண்டனி.. உங்க படத்துக்கு எதிரியே நீங்கதான்

Actor Vijay Antony: இந்த வாரம் ரம்ஜான் ஸ்பெஷல் ஆக விஜய் ஆண்டனியின் ரோமியோ, ஜிவி பிரகாஷின் டியர் ஆகிய படங்கள் வெளிவந்தது. ஆனால் இரண்டுமே ஆவரேஜ் நிலையில் தான் இருக்கிறது.

அதில் ரோமியோ படத்தை ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய பாணியில் பங்கம் செய்திருக்கிறார். வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வரும் விஜய் ஆண்டனி ஹீரோயினை திருமணம் செய்கிறார்.

ஆனால் நடிகையாக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் மிருணாளினி விவாகரத்து கேட்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் மெயின் கதை.

ரோமியோவை தாக்கிய ப்ளூ சட்டை

ஆனால் இடையில் தங்கச்சி சென்டிமென்ட் என பல கிளைகளாக கதை பிரிகிறது. அதேபோல் விஜய் ஆண்டனி எல்லாத்துக்கும் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷன் மட்டுமே கொடுக்கிறார்.

அம்மாவிடம் பேசினாலும் சரி மனைவியிடம் பேசினாலும் சரி அவ்வளவு ஏன் கோபப்படும்போது கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இதுவே எல்லா படத்துக்கும் இருப்பதால் பெரும் பலவீனமாகவும் உள்ளது.

அப்படிப் பார்த்தால் அவருடைய படத்துக்கு அவர்தான் மிகப்பெரிய எதிரி என ப்ளூ சட்டை மாறன் வச்சு செய்துள்ளார். மேலும் படத்தில் ரசிக்கும் படியாக எந்த பாடல்களும் இல்லை.

காமெடியும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஆக மொத்தத்தில் படம் ரொம்பவும் சுமார் என ப்ளூ சட்டை ரோமியோவை கடுமையாக தாக்கியுள்ளார்.

Next Story

- Advertisement -