புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பிரதர் vs ப்ளடி பெக்கர்: வசூலில் கவினை மிஞ்சினாரா ஜெயம் ரவி.. மூன்றாம் நாள் கலெக்சன் ரிப்போர்ட்

பிரதர் vs ப்ளடி பெக்கர்: தீபாவளி ரிலீஸ் ஆக கடந்த வியாழக்கிழமை ஜெயம் ரவி நடித்த பிரதர் மற்றும் நடிகர் கவின் நடித்த ப்ளடி பெக்கர் படங்கள் ரிலீஸ் ஆகின. அத்தோடு சேர்த்து சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படமும் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

இந்த படம் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் படம் என்பதால் இதை மற்ற இரண்டு படங்களுடனும் ஒப்பிட முடியாது. இப்போதைக்கு போட்டி ஜெயம் ரவிக்கும், நடிகர் கவினுக்கும் தான். ஜெயம் ரவியை பொருத்தவரைக்கும் பல சருக்கல்களுக்குப் பிறகு பிரதர் படம் அவருக்கு ரிலீஸ் ஆகி இருக்கிறது.

கவின் தொடர்ந்து லிப்ட் மற்றும் டாடா படங்களை வெற்றி படங்களாக கொடுத்தார். அதை தொடர்ந்து வெளியான ஸ்டார் படம் கவினுக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் இப்போதைக்கு ஜெயம் ரவி மற்றும் கவின் இரண்டு பேருக்குமே ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் தான்.

இருந்தாலும் ஜெயம் ரவி சீனியர் நடிகர் என்பதால் அவருக்கு கொஞ்சம் பதட்டம் அதிகமாகவே இருக்கும். தற்போது இந்த இரண்டு படங்களின் வசூலை பற்றி பார்க்கலாம்.

ப்ளடி பெக்கர் 3வது நாள் கலெக்சன்:

வியாழன்: Rs 2.25 crore
வெள்ளி: Rs 1.75 crore
சனி: Rs 1.40 crore
மொத்தம்: Rs. 5.40 crore

பிரதர் 3வது நாள் கலெக்சன்:

வியாழன்: Rs 2.75 crore
வெள்ளி: Rs 2.25 crore
சனி: Rs 1.90 crore
மொத்தம்: Rs. 6.90 crore

- Advertisement -

Trending News