135 கோடிகளை வாரி சுருட்டிய பிரேமலு.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா.?

Premalu OTT Release: இந்த வருடம் மலையாளத்தில் வெளியான அடுத்தடுத்த படங்கள் 100 கோடிகளைத் தாண்டி வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. அதில் மஞ்சுமல் பாய்ஸ் பெரும் சாதனையை படைத்து விட்டது.

அதே போன்று தான் பிரமயுகம், பிரமலு, ஆடு ஜீவிதம் போன்ற படங்களும் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளன. இதில் பிரேமலு இளசுகள் கொண்டாடும் படமாக 135 கோடிகளை தட்டி தூக்கியது.

கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ள இப்படத்தை பகத் பாஸில் உட்பட இன்னும் சிலர் சேர்ந்து தயாரித்து உள்ளனர். சச்சின், ரேணு ஆகிய கதாபாத்திரங்களுக்கு இடையே இருக்கும் காதல், ரொமான்ஸ் தான் படத்தின் கதைகளம்.

ஓடிடிக்கு வரும் பிரேமலு

அதனாலயே இப்படம் இளைஞர்களை பெரிதும் கவர்ந்து விட்டது. அது மட்டுமின்றி படத்தை தியேட்டரில் பார்த்தவர்கள் கூட ஓடிடியில் பார்க்க ஆர்வம் காட்டி வந்தனர்.

அந்த வகையில் தற்போது இந்த ஜோடி ஓடிடியில் ரசிகர்களை மகிழ்விக்க வர இருக்கின்றனர். அதன்படி பிரேமலு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கிறது.

முன்னதாக இப்படத்தை வாங்குவதற்கு பல நிறுவனங்கள் போட்டி போட்டு வந்தது. ஆனால் அந்த ரேஸில் ஹாட் ஸ்டார் ஜெயித்துவிட்டது. இதற்காக அவர்கள் பல கோடிகளை கொட்டி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -