கடந்த 18 ஆம் தேதி தமிழக சட்டப் போரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். ஆனால் சசிகலா தரப்பு எம்எல்ஏக்களை சொகுசு விடுதிகளில் அடைத்து வைத்து மிரட்டப்பட்டு வாக்களிக்க வைக்கப்பட்டார்கள் என குற்றம் சாட்டப்பட்டது.

அதே நேரத்தில் சசிகலா தரப்பு எம்எல்ஏக்களின் தொகுதியைச் சேர்ந்த பொது மக்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கக்கூடாது என வலியுறுத்தி வந்தனர்.

சசிகலாவை ஆதரித்தால் தொகுதிக்குள் வரமுடியாது என்றும் பொது மக்கள் என்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் 122 எம்எல்ஏக்கள் சசிகலாவின் தேர்வான எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து வாக்களித்தனர்.

இதனால் பெரும்பாலான எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிப்பக்கமே போகமுடியாமல் திண்டாடி வருகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் தொகுதிக்குள் சென்று வருகின்றனர். பல இடங்களில் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களுக்குகடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் தொகுதிக்குள் சென்றார்.அப்போது சீலையம்பட்டி என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் அவரை அதிர்ச்சி அடையச் செய்தது.

மக்கள் மற்றும் கட்சியினரின் உணர்வுகளுக்கு மதிப்பிளிக்காத எம்எல்ஏவுக்க எதிர்ப்புத் தெரிவியுங்கள் என பதிவிடப்பட்டிருந்தது. மேலும் அவரது தொலைபேசி எண்ணும் குறிப்டப்பட்டிருந்தது.

இதே போன்று பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ கதிர்காமுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தெற்கு புதுத் தெரு, மார்கெட் தெரு,வடகரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி இருந்தனர் .

தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக பொதுமக்கள் உயர்த்தியுள்ளனர்.