Tamil Cinema News | சினிமா செய்திகள்
பரிதாபங்களை தொடர்ந்து பிளாக் ஷீப் சேனலின் புதிய படம்.. ஹீரோவாகும் மைக் செட் ஸ்ரீராம்
தற்போது சினிமாவை விட அனைவரும் செல்போன்களில் யூடியூப் மூலம் படம் பார்ப்பதையே விரும்புகின்றனர். அந்த காலத்தில் சீரியலில் என்று சொல்லப்பட்டது இந்த காலத்தில் வெப்சீரிஸ் என்று சொல்லப்பட்டு ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.
எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளனர். அந்த வகையில் யூடியூப் சேனல்களில் முக்கியமான இடத்தைப் பிடித்தது பிளாக் ஷீப். மற்ற யூடியூப் சேனல்களுக்கு தாயாக விளங்குவது. இதில் வெளிவரும் அனைத்து வெப்சீரிஸ் இணையதளங்களில் ஹிட் அடித்துள்ளது.
தற்போது இவர்கள் பெரிய திரைக்கு செல்ல இருக்கின்றனர். அந்த வகையில் விக்னேஷ் காந்த் புதிய படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறார். அந்த படத்தை மற்றொரு யூடியூப் நிறுவனத்தின் உரிமையாளரான மைக் செட் ஸ்ரீராம் மற்றும் அயாஷ் என்பவர்கள் ஹீரோவாக நடிக்க உள்ளனர்.
பள்ளிப் பருவ காலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் இன்னொரு யூடியூப் சேனல் பரிதாபங்கள், மணி டுடே கம் டுமாரோ கோ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களுக்கு யூடியூப் சேனல் மூலம் அவர்களது வாழ்க்கை ஒளிமயமாக இருக்கிறார்கள் என்பது இவர்களின் மூலம் சாத்தியமாகியுள்ளது.
