சமீபகாலமாக பத்திரிக்கை..மற்றும் வலைத்தளங்களில் ஜனா என்கிற பெயர் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. யார் இந்த ஜனா..?

சினிமா உலகையே ஆட்டிப் படைத்தவர் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கும், முன்னணி ஹீரோக்களுக்கும், நடிகைகளுக்கும் மிகவும் அறிமுகமானவர் ஜனார்த்தனன்.

அதிமுக ஆட்சி காலங்களில் டிவி ரைட்ஸ் வாங்கிக் கொடுப்பதில் இவரை யாரும் தாண்டிச் செல்ல முடியாது. அப்படி வாகிக் கொடுக்க இவர் கேட்கும் கூலி..சில லட்சங்கள்.

மற்றும் அந்த படத்தில் நடித்த பெண்கள். ஒரே வார்த்தை அண்ணன் வரச்சொன்னார்,. அவ்வளவுதான் மறு பேச்சே இருக்காது.

அனுப்பியே ஆஹ வேண்டும். இதற்காக பணம் போட்டுபடம் எடுக்கும் சில தயாரிப்பாளர்கள் நடிகைகளின் காலில் விழுந்து கதற வேண்டும்.

பல நேரங்களில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆவதைத் தாமதப்படுத்தவும் செய்தவர். 2011ல் வந்த பல தமிழ் சினிமாக்கள் இவரின் ‘கண்ணசைவுக்காக’ காத்திருந்துள்ளன.

சன் டிவியில் இருந்த சக்சேனா போல ஜெயா டிவியின் ஜனா செயல்பட்டார். விசாரித்த ஜெ. சென்னை தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அதிகாரம் குவிந்துகிடக்கும் இடங்களில் இவரை அடிக்கடி அந்தக் காலக்கட்டத்தில் எளிதாகக் காணமுடியும்.

டெண்டர், பணிஉயர்வு, பணி மாறுதல் என்று சகல அரசு நிர்வாக விஷயங்களில் தலையிட்டு காரியம் சாதித்துக் கொள்வார்.

இதையெல்லாம் அறிந்து அதிர்ச்சியான ஜெயலலிதா, உடனடியாக தனி டீம் போட்டு விசாரிக்க வைத்தார்.

விரட்டியடித்த ஜெ. சென்னை ஜாபர்கான் பேட்டையில் சொகுசு அடுக்குமாடி வீடு, ஈசிஆரில் பங்களா, சொகுசு கார்கள் என்று வாங்கிக் குவித்துள்ளார் ஜனா என்று அறிந்து அதிர்ச்சியான ஜெயலலிதா,ஜெயாடிவியில் இனி நீ இருக்க கூடாது என்று எச்சரிக்கை செய்து விரட்டினார்.

ஆனாலும் அவர் தினகரனின் உதவியாளராகவே தொடர்ந்தார். அவருக்கு சகல ஏற்பாடுகளும் செய்து கொடுத்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் வெளிப்படையாக தனது லாபியை செய்து, இப்போது டெல்லி போலீசின் பிடியில் சிக்கியிருக்கிறார்.

இரண்டு இரவுகள் கதற கதற லாடம் கட்டியதில் அத்தனை ரகசியங்களையும் கக்கி விட்டாராம்.

டெல்லி போலீஸ் அவரை ‘முழுமையாக’ விசாரித்து அப்ரூவராக்கிவிட்டது. அதனால் விடுவித்திருக்கிறது.

தினகரன் சிறைக்குப் போகவும் இந்த ஜனாவின் ஒப்புதல் வாக்குமூலங்களே காரணம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

இன்னும் சில நாட்களில் மொத்த மன்னார் குடி கும்பலும் வரிசையாக மாட்டும் என்கிறார்கள்.