ஆணவ கொலை, இறப்புக்கு பின் நடக்கும் சம்பிரதாய சடங்கு.. உண்மை வழக்கத்தை தழுவி எடுத்த எமகாதகி படத்தின் கதை

yemakadhagi

Yemakadhagi: உயிர் போன பெண் வீட்டை விட்டு வெளியேற மறுக்கும் இளம்பெண்ணின் கதை தான் எமகாதகி. அறிமுக இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

இயற்கைக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யத்தை பற்றி இந்த படம் பேசி இருக்கிறது. இது இயக்குனரின் ஊரில் நடந்த விஷயங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்று அவரே தெரிவித்திருக்கிறார்.

பொதுவாக தென்மாவட்டங்களை பொருத்தவரைக்கும் ஆணவக் கொலை என்பது அவர்களுடைய கௌரவம். அதை வெட்ட வெளியில் செய்யவே அவர்கள் விரும்புகிறார்கள்.

எமகாதகி படத்தின் கதை

ஆனால் வட மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் தெரியாமல் காரியத்தை முடித்துவிட்டு தற்கொலை செய்து விட்டதாக சொல்லிவிடுகிறார்கள்.

இதுபோன்று தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களின் ஆத்மா அந்த வீட்டிலேயே இருக்குமாம்.

சொந்த பந்தம், அக்கம் பக்கத்தினர் எந்த அளவுக்கு வாய்விட்டு அழுது கவலையை வெளிப்படுத்துகிறார்களோ அதில் திருப்தி அடைந்து தான் அந்த ஆத்மா வெளியில் போகுமாம்.

ஆன்மாவுக்கு அவர்கள் அழுவது திருப்திகரமாக இல்லை என்றால் அந்த பிணத்தை காவல் காக்குமாம். எத்தனை பேர் நினைத்தாலும் அந்த உடலை தூக்க முடியாதாம்.

இதனால் தற்கொலை செய்து கொண்டவர்களின் உறவுக்கார பெண்கள் ஒரு இரவு முழுதும் ஆறில் அடித்துக்கொண்டு அழுது தான் அதன் பின்னர் உடலை எடுப்பார்களாம்.

இதை மையமாக வைத்து தான் இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். நேற்று வெளியான இந்த டீசர் படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்து விட்டது.

இந்த படத்தில் கதாநாயகியாக ரூபா நடித்திருக்க, கதாநாயகனாக யூடியூபர் NP என்று அழைக்கப்படும் நரேந்திர பிரசாத் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் ஏழாம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Advertisement Amazon Prime Banner