சகலகலா வல்லவரான நடிகர் கமல்ஹாசன், சென்னையில் நடந்த இந்தியா டுடே சார்பில் நடந்த மாநாட்டின் துவக்கநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது கமல்ஹாசன் தனது சினிமா அனுபவம் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசும்போது…. சினிமாவில் ஒரு விருப்பமற்ற நடிகராகத்தான் இருக்கிறேன். இருந்தாலும் பணம் தருகிறார்கள் நடிக்கிறேன். ஒருபோதும் விருதுக்காக நான் படம் எடுப்பது கிடையாது. எனது படங்களில் பல பிரச்னைகள் வந்துள்ளது. ஹேராம், விஸ்வரூபம்… என்று எனது நிறைய படங்களுக்கு பிரச்னை வந்துள்ளது. படங்களை ரிலீஸ் செய்ய விடாமல் சதிகளும் நடந்திருக்கிறது. நான் ஒருபோதும் கறுப்பு பணம் வைத்து கொண்டது கிடையாது என்று கூறியுள்ளார்.