குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதில் பா.ஜ.,வுக்கு இணை வேறு யாருமில்லை என்றே சொல்லலாம்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தற்போதைய தமிழக அரசியல். 7 எம்.எல்.ஏ.,க்களை வைத்துக் கொண்டு முதல்வராக தொடரும் ஓ.பி.எஸ்., ஒருபுறம். 127 எம்.எல்.ஏ.,க்களை கூவத்தூரில் அடைகாத்து வைத்தும், முதல்வராக முடியாமல் தவிக்கும் சசிகலா. இது ஒருபுறம் இருக்க அரசியலில் அடுத்த கட்ட காய் நகர்த்தல்களை துவங்கியுள்ளது பா.ஜ.,.

எப்படியாவது தங்கள் கட்சிக்கு பிரபல நட்சத்திரத்தை தமிழக பா.ஜ., தலைவராக்கி விட வேண்டும் என அக்கட்சி மும்முரமாக உள்ளது. அதனால், ரஜினிகாந்தை தலைவராக்கிவிட வேண்டும் என்பது பா.ஜ.,வின் கனவு. ஆனால் ரஜியோ திரும்பிக்கூடப் பார்க்க மறுக்கிறார்.

இதனால் அவர் வரும் போது வரட்டும், என முடிவு செய்துள்ள பா.ஜ., அவருக்கு அடுத்த நிலையில் உள்ள நடிகர்கள் பக்கம் தங்கள் பார்வையை திருப்பியுள்ளது.

இதனால் கமல், சரத்குமார், விஜய், அஜீத் ஆகியோருடன் பேசி வருகிறார்களாம். இதை பா.ஜ., ஆதரவுப் பத்திரிகை ஒன்று உறுதி செய்துள்ளது.

கமல் அவ்வப்போது பொன் ராதா, தமிழிசை ஆகியோருடன் தொடர்பில் உள்ளார் என பேசப்படுகிறது. மோடி தமிழகம் வந்த போது விஜய்யை நேரில் சந்தித்தார். ஆனால் ‘தல’ அஜீத் மட்டும் பிடிகொடுக்கவே மாட்டேன் என்கிறார் என பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.