prakash

நடிகர் பிரகாஷ் ராஜ் காரை வழி மறித்து மிரட்டியுள்ளார்கள் பாஜகவினர்கள் தற்பொழுது இந்த வீடியோவை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். பிரகாஷ்ராஜ் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருபவர்.

prakash raj
prakash raj

இவர் தனது வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார், இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜக் நிர்வாகிகளை தனது ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகிறார். நடிகர் பிரகாஷ் ராஜ் காரை கர்நாடகாவில் வழிமறித்து ரகளை செய்தார்கள் பாஜக நிர்வாகிகள் ஆனால் அதை பொருட் படுத்தாமல் பிரகாஷ் ராஜ் சிரித்தபடியே சென்றுள்ளார்.

இதனை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் அவர் கூறியதாவது பாஜக நிர்வாகிகளே உங்கள் வேலையை பாருங்கள், என்னை இந்த ஜோக்கர் கூட்டம் மிரட்ட நினைத்தால், அதற்க்கு நான் பயப்டபோவதில்லை மேலும் என்னை வலுவாக்கி கொண்டுதான் போவேன் என ஆவேசமாக கூறியுள்ளார் இதோ பாஜக மிரட்டல் வீடியோ