Politics | அரசியல்
ரஜினியை கழட்டிவிட்டு அஜித்துக்கு வலைவீசும் பாஜக.. சிக்குவார்களா ரசிகர்கள்

அஜித்துக்கு வலைவீசும் பாஜக
ரஜினி கழட்டிவிட்டு அஜித்துக்கு வலைவீசும் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். பிஜேபியுடன் தமிழ்நாட்டில் எந்த கட்சியும் கூட்டணி அமைப்பதாக தெரியவில்லை. தனித்தும் போட்டியிட முடியாது, யாருடைய ஆதரவாது கிடைத்தால் மட்டுமே பிஜேபி ஓரளவு ஓட்டுகளை வாங்கும்.
அந்த வகையில் பாஜகவினர் அஜித் ரசிகர்கள் சேர்க்க திட்டமிட்டுள்ளனர். ரஜினி வருவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் ரஜினி பிடி கொடுப்பதாக தெரியவில்லை. அதிமுகவும் கைவிடும் நிலையில்தான் இருக்கிறது.
எனவே அதற்கு சமமான இடத்தில் இருக்கும் அஜித் ரசிகர்கள் மீது தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை வைத்துள்ளார். திருப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் நூறு ரசிகர்கள் பாஜகவில் இணைவதாக சேர்ந்தனர். அவர்கள் உண்மையில் அஜித் ரசிகர்கள் தானா அல்லது பாஜகவினர் நூறுபேரை அழைத்து இப்படி செய்தியை கிளப்பிவிட்டு விளம்பரப் படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.
கூட்டத்தில் பேசிய தமிழிசை சௌந்தராஜன் மோடியின் திட்டங்களுக்கு அஜித் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள், அஜித் மிக நல்லவர் நிறைய பேருக்கு உதவி செய்துள்ளார் என்று அஜித்தை புகழ்ந்தும், மோடியின் திட்டத்தை அஜித் ரசிகர்கள் மக்களிடத்தில் சேர்ப்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
