Connect with us
Cinemapettai

Cinemapettai

Politics | அரசியல்

கமலின் ஒழுக்கத்தை பற்றி கேவலமாக பேசிய தமிழிசை..! வெளுத்து வாங்கிய திருமுருகன் காந்தி

kamal-tamilisai

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அரசியல் களத்தில் குதித்துள்ளனர். மேலும் இவர்களது கட்சியின் கொள்கைகளை அவ்வப்போது கூறி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதனால் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் இவர்களை பேச்சால் தாக்கி வருகின்றனர். சமூக ஆர்வலரான திருமுருகன் காந்தி கமலஹாசனை பற்றி அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதே போல் பா.ஜ.கவின் செல்லப்பிள்ளையான தமிழிசை சவுந்தர ராஜன் சமூக வலைத்தள பக்கத்தில் கமலை தாக்கி உள்ளார்.

அது என்னவென்றால் திருமுருகன் காந்தி அப்படிப்பட்ட ஒழுக்க சீலரான காந்தியடிகள் தான் பாஜகவின் தாய் கழகமான ஆர்.எஸ்.எஸ் கொலை செய்தது என்பதையும் கொலை செய்த கோட்சேவை மோடி கொண்டாடினார் என்பதையும் மறந்து விடவில்லை என கூறியுள்ளார்.

இதற்கு காரணம் தமிழிசை சௌந்தரராஜன் தான் ஏனென்றால் அவர் கமலைப் பற்றி சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

அது என்னவென்றால் தன் வாழ்க்கையில் எப்போதும் ஒழுக்கத்தையே கடைப்பிடித்த காந்தியின் கொள்ளுப்பேரன் தான் என்று, கமல் சொல்லிக்கொள்ள எந்த தகுதியும் இல்லாதவர்.

ஏனெனில் இதுவரை அவர் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த ஒழுக்கத்தையும் கடை பிடிக்காதவர் என்பது நாடறிந்த உண்மை. ஊருக்கே உபதேசிக்க என்ன தகுதி? அரசியல் நடிப்பு? என சரமாரியாக தாக்கியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top