ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு தன் அரசியல் ஆசையை வெளிக்காட்டிய லாரன்ஸ் எப்படி அந்த ஆசையை வெளியே சொன்னார் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கு.

ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்தவுடன் மத்திய அமைச்சர் பொன் .ராதாகிருஷ்ணன் தொலைபேசியில் ரஜினி, கமல் , லாரன்ஸ் ஆகியோரிடம் பேசினாராம். அப்போது லாரன்ஸ் அவரை நேரில் சந்திக்க டைம் கேட்டு போய் பார்த்தாராம்.

ரொம்ப நேரம் பேசிய பொன்னார் , நீங்க அரசியலுக்கு வந்தா நல்லா இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்.அவருக்கு தன் வீடு உணவை தன் கையாலேயே பரிமாறி சாப்பிட வைத்து அன்பாக பேசி அனுப்பி உள்ளார்.

அதன் பின் நடந்த பிரஸ்மீட்டில் தான் தேவைப்பட்டால் அரசியலுக்கு வருவேன் ஸ்டேட்மெண்ட் லாரன்ஸ் சொல்லியுள்ளார்.

ரஜினி வரலைன்னா, லாரன்ஸை கடசியில் சேர்த்திடலாம்ன்னு, இன்டெலிஜென்சை பயன்படுத்தி பொன்னார், லாரன்ஸ் பற்றி விவரம் சேகரித்தாராம். அவருக்கு சி ஆடியன்ஸ் மாஸ் சூப்பரா இருக்கு என்றும் , தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் சமூகத்தின் ஓட்டுக்களை பிஜேபி அள்ளிடலாம் என்றும் தகவல் வர, லாரென்ஸிடம் நெருக்கமோ, நெருக்கம் காட்டியுள்ளார் பொன்னார் என்று கிசுகிசு கிளம்பி உள்ளது.