fbpx
Connect with us

தவறாக பேசிய எம்எல்ஏவின் தலைக்கு 50 லட்சம் பரிசு.. பெரிதான சண்டை

sadhna-singh

India | இந்தியா

தவறாக பேசிய எம்எல்ஏவின் தலைக்கு 50 லட்சம் பரிசு.. பெரிதான சண்டை

பிஜேபி எம்எல்ஏவின் தலைக்கு 50 லட்சம் பரிசு

உத்தரபிரதேச மாநிலத்தின் தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏவான சாதனா சிங், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதியை கடுமையாக தரம்தாழ்த்தி விமர்சித்துள்ளார். அதற்கான எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

அவர் மாயாவதியை பற்றி கூறுகையில் ஆண் போலவும் இல்லை, பெண் போலவும் இல்லை, மூன்றாம் பாலினத்தை போல் இருக்கிறார் என்று கூறியுள்ளார். அவரின் இந்த தரம் தாழ்ந்த விமர்சனங்களை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அவர் இதற்கு வாய்தவறி தெரியாமல் பேசிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

இதனால் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ வான விஜய் யாதவ் மாயாவதியை கீழ்தரமாக பேசிய சாதனா சிங் மாயாவதி இடமும், நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் சாதனாவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top