ஆக்ரா: பள்ளி செல்லும் மாணவிகளுக்கு செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ சஞ்சீவ் ராஜா தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் உதய் சிங் இண்டர் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பாஜக எம்.எல்.ஏ சஞ்சீவ் ராஜா, மேயர் சகுந்தலா பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சகுந்தலா பாரதி, பள்ளி செல்லும் மாணவிகளுக்கு செல்போன்கள் எதற்கு? என்று கேள்வி எழுப்பினார். இதன் காரணமாகவே அலிகாரில் உள்ள பெண்கள் தவறான பாதையில் செல்வதாகவும், தவறான மனிதர்களுடன் தொடர்பு கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

அதிகம் படித்தவை:  +2, 10ம் வகுப்பு தேர்வில் "ரேங்க்" ஒழிப்பு.. இனி "1-2-3" கிடையாது.. தமிழக அரசு அதிரடி

இதையடுத்து பேசிய எம்.எல்.ஏ சஞ்சீவ் ராஜா, பள்ளிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் மாணவிகளுக்கு எதற்கு செல்போன்கள் என்று கூறினார். அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிக்க வேண்டும் என்றும், அதற்கு அவர்களது பெற்றோர்கள் தான் முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் செல்போன் பயன்படுத்த வசதியாகவே இளம்பெண்கள் முகத்தை மூடியவாறு நடமாடுகிறார்கள் என்றார். அந்த பேச்சிற்கு கடும் கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளது.