பலான வீடியோவால் சிக்கிய பிஜேபி தலைவர்.. உட்கட்சி பூசலால் வெளிவந்த வீடியோ., ஜல்சா கட்சி என ட்ரெண்டிங்

தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று மத்திய அரசு ஒருபுறம் போராடிக் கொண்டுதான் வருகிறது. இந்த நிலையில் தற்போது பிஜேபியின் முக்கிய தலைவர் மோசமான செயலில் ஈடுபட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

பிஜேபியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கே டி ராகவன் வீடியோ காலில் பெண்களுடன் மோசமாக பேசி, மோசமான செயலில் ஈடுபட்டுள்ள வீடியோ அந்த கட்சியினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை பிஜேபியின் உட்கட்சிப் பூசலால் வெளியிடுமாறு அண்ணாமலை கூறியிருப்பதாகவும் ஒரு சில தகவல் வெளியாகியுள்ளது. இதனை மாதவன் வெளியிட்டு சமூக வலைத்தளத்தை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

madan-diary
madan-diary

தமிழ்நாட்டு மக்களிடம் எப்போது சிக்குவார்கள் என்று சூழ்நிலையில் தற்போது இதுபோன்ற சம்பவத்தை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்திய அளவில் #பாலியல்_ஜல்சா_கட்சி என்ற ஹாஷ் டாக்கை ட்ரெண்டிங் செய்து அசிங்கப்படுத்தி வருகின்றனர்.

இது போன்ற முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு கட்சிக்கு ஏற்படுத்தியுள்ள இந்த சிக்கலை எப்படி சமாளிப்பது என்று விழி பிதுங்கி உள்ளது பிஜேபி முக்கிய தலைவர்கள். சில விஷமிகள் பிரபலமாக வேண்டும் என்று இதுபோன்ற வீடியோக்களை மார்பிங் செய்து வெளியிட்டிருக்கலாம் என்பது போன்றும் பிஜேபியின் தரப்பில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

bjp-trending
bjp-trending

எது உண்மை என்பது போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வெளிக்கொண்டு வந்தால் மட்டுமே தெரியும் என்பதே மக்களின் கோரிக்கை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்