பி.ஜே.பி, அ.இ.அ.தி.மு.க.வை தங்கள் கூட்டணியில் இணைக்க விரும்புகிறது; 2019 ல் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னணி வலுவாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா ஆகியோர் அரசியலமைப்பு பதவி வகிக்கும் ஒரு மூத்த பிஜேபி நிர்வாகிக்கு தமிழ்நாட்டில் ஆளும் கட்சியை வலுப்படுத்தும் வேலை கொடுக்கபட்டு உள்ளது.

Edapadi-Modiமத்திய அமைச்சரவை மாற்றத்திற்கு முன் வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பாரதீய ஜனதா கூட்டணியுடன் அ.தி.மு.க இணையலாம் என தகவல்கள் கூறுகின்றன.மத்திய அமைச்சரவையில் சில எம்பிக்களுக்கு பதவி வழங்க வேண்டியது உள்ளது. அ.தி.மு.கவின் முடிவு என்ன வென்று தெரியாமல் தற்போதைக்கு அமைச்சரவையில் மாற்றம் இருக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் உயர் மட்டத்தில் 3 வகை சிந்தனைகள் உள்ளன ஆளுநர் நியமனம், அமைச்சரவை மாற்றியமைத்தல் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவையாகும்.

ஆகஸ்டு முதல் வாரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க இணையும் என்ற பிரதான அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.