நடிகர் சீயான் விக்ரம் தமிழ்த் திரையுலகில் 1990 ஆம் ஆண்டில் கால்பதித்து, படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

ஒரு நடிகராகத் திரையுலகில் நுழைந்த அவர், பின்னணிப் பாடகராகவும், டப்பிங் கலைஞராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். இன்று விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு, விக்ரம் அடுத்த நடித்து வெளிவர இருக்கும் துருவநட்சத்திர படத்தின் 2ம் டீசரை நேற்று மாலை படக்குழு வெளியிட்டது.

இந்த படம் முழுவதும் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஹாலிவுட் படத்திற்கு இணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விக்ரம் இன்று தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்….