Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வீரமரணம் அடைந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் வாழ்க்கை படமாகிறது. லைக்ஸ் குவிக்குது டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர். ஜெய் ஹிந்த்.

2008 இல் நடந்த மும்பை (26/11) தாக்குதலில் போராடி உயிர் இழந்த சந்தீப் உன்னிகிருஷ்ணன் அவர்களின் பயோபிக் ரெடியாகிவருகின்றது.

நம் இந்தியாவை பொறுத்தவரை ராணுவமும், அதன் வீரர்களும் அவர்களின் நாட்டுப்பற்றும் உலகில் உள்ள எந்த ராணுவத்தையும் விட அதிகம் என்பது நாம் சொல்லி உங்களுக்கு தெரிய தேவையில்லை.

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாதிகளை தாக்கி தக்க பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில் நம் இந்திய ராணுவத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் உருவாகும் படத்தின் முக்கிய அறிவிப்பு நேற்று வந்துள்ளது.

கடந்த 2008 வருடம் நவம்பர் மாதம் லக்ஷ்ர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த நபர்கள்,மும்பை பகுதிகளில் பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். அதில் தாஜ் பேலஸ் ஹோட்டலும் ஒன்று

மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன்

கேரளா வம்சாவளியை சேர்ந்தவர். இவரின் அப்பா இஸ்ரோவில் பணி புரிய பெங்களூரில் செட்டில் ஆன குடும்பம். தன் ஆர்வம் மற்றும் முயற்ச்சியால் 1995இல் the National Defence Academy (NDA), வில் சேர்ந்தார்.

மும்பை ஹோட்டலில் தீவிரவாதிகள் சில பெண்களை பணயக்கைதிகளாக வைத்திருந்தனர். 10 கம்மாண்டோ வீரர்கள் மீட்பு பணிக்கு இவர் தலைமையில் சென்றனர். மூன்றாவது மாடியில் அந்த அறையினுள் நுழைந்த சமயத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் சக வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

major

தீவரவாதிகளை எதிர்த்து துல்லியமாக சுட்டு அவர்களை பின்வாங்க வைத்து, அந்த வீரரை மருத்துவ உதவிக்கு செல்ல வைத்தார். பின்னர் நடந்த தாக்குதலில் இவர் கையில் குண்டு பட்டது. எனினும் தன் கடைசி மூச்சு பிரியும் வரை எதிர்த்து போராடி உயிரை விட்டார். உயரிய விருதான அசோகா சக்கரா அளிக்கப்பட்டுள்ளது .

major

மேஜர்

தாக்குதலை மையப்படுத்தி, அதனுடன் இவரின் வாழ்வியல் சம்பவங்களையும் சேர்த்து படமாக்கி வருகின்றனர். ஹிந்தி, தெலுங்கில் இப்படம் ரெடியாகிறது.

ADIVI SESH

சோனி நிறுவனம், ஹீரோ மகேஷ் பாபு மற்றும் ஏ பிளஸ் எஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். ஆத்வி சேஷ் ஹீரோவாக நடிக்கிறார் சஷி கிரண் டிக்கா படத்தை இயக்குகிறார்.

MAJOR

இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு நேற்று வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top