fbpx
Connect with us

Cinemapettai

வாழ்க்கை வரலாறு டிரண்டு படங்கள்

News | செய்திகள்

வாழ்க்கை வரலாறு டிரண்டு படங்கள்

ஒரு சாதனையாளர் அல்லது பிரபலத்தின் வாழ்க்கையை மக்கள் எல்லோருக்கும் தெரியப்படுத்துற விஷயம்தாங்க இப்போ சினிமாவுல பெரிய டிரண்டா வளர்ந்துட்டு இருக்கு.

இந்த வாழ்க்கை வரலாறு படங்கள்ல அந்த பிரபலத்தின் வாழ்க்கைல அவரு எந்த அளவுக்கு கஷ்டங்களை சந்திச்சாரு, அவருக்கு ஆதரவாகவும், தொந்தரவாகவும் யாரெல்லாம் இருந்தாங்க, அதை தாண்டி அவரு எப்படி பிரபலமானார் என்று சிறிய சிறிய விஷயங்களையும் சுவாரஸ்யமாக மக்கள் முன்னே எடுத்துக்காட்டும் முயற்சித்தாங்க இது.

dhoniஇதைப்போன்ற மக்களிடமும் இப்போது பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. நாம் பொதுவாக நினைப்பதுபோல் பிரபலங்களின் வாழ்க்கை கஷ்டமில்லாதது அல்ல, அவர்களும் தினம் தினம் பல இக்கட்டுக்களை சந்திகின்றனர் என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ளுமாறு இந்த திரைப்படங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

சினிமா நட்சத்திரங்களின் வரலாறு மட்டுமில்லாமல் தற்போது வெளிவந்த M.S. தோனி, Sachin the billion dreams போன்ற விளையாட்டு வீரர்களின் வரலாறும் பெரிதும் வெற்றியடைந்துவருகிறது.

இப்போ இந்த வரிசைல நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறை மகாநதி என்ற பெயரில் கீர்த்தி சுரேஷை வைத்து தயாரித்து வருகிறார்கள். இதுல ஜெமினி கணேஷனாக நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார்.

இதே போல் NTR அவர்களின் வாழ்க்கை வரலாறை இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்குகிறார். இதில் NTR வேடத்தில் அவரது மகன் பால கிருஷ்ணா நடிக்கிறார். இந்த படத்திற்கான சிறுசிறு தகவல்களை NTR உடன் பணி புரிந்த மற்றும் நடித்த பலரிடமும் சேகரித்து வருகிறார்கள்.

balakrishnaஅடுத்து நம் பாரத பிரதமர் மோடி அவர்களின் வாழ்க்கை வரலாறில் மோடியாக ஹிந்தி நடிகர் அக்க்ஷை குமார் நடிக்க உள்ளார்.

தமிழில் பாரதி, பெரியார், காமராஜர், ராமனுஜம் போன்ற வரலாற்றுப் படங்கள் வசூல் ரீதியில் தோல்வியடைந்தாலும் மக்கள் மனதில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதில் ஐயமில்லை. ஆக இது போன்ற திரைப்படங்களை வசூல் ரீதியாகவும் வெற்றி பெறச்செய்தல் ஒவ்வொரு ரசிகனின் கடமை.

kamarajarசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: இந்த அஞ்சலி நடிப்புல ஷகீலா வாழ்க்கை வரலாறை படமா எடுக்கப்போறாங்கன்னு சொன்னாங்களே அது என்னாச்சு?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top