பிந்து மாதவி

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மதனப்பள்ளியில் பிறந்தவர் பிந்து மாதவி. அவரது தந்தை வணிகவரித் துறையின் துணை ஆணையாளாரப் பணியாற்றிதால், சிறுவயதில் இருந்தே பல நகரங்களில் வசித்தார். வேலூர் தொழிநுட்பக் கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்தார். தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்த இவரை இயக்குனர் கௌதம்மேனன் தான் தயாரித்த வெப்பம் திரைப்படத்தில் ஹீரோயினாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

இப்படத்தைத் தொடர்ந்து கழுகு , கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், பசங்க 2, ஜாக்சன் துரை என்று பல படங்களில் நடித்தார். படங்களில் நாயகியாக நடித்துக் கிடைத்த புகழைவிட ‘பிக் பாஸ்’ மூலம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பேமஸ் ஆனவர்.

Bindu Madhavi

இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் ப்ளாக் ட்ரெஸ்ஸில் உள்ள போட்டோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Bindu Madhavi