bindu-madhavi

அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிந்து மாதவி ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த தகவலை படத்தின் இயக்குனர் கரு. பழனியப்பன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிந்து மாதவி

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மதனப்பள்ளியில் பிறந்தவர் பிந்து மாதவி. அவரது தந்தை வணிகவரித் துறையின் துணை ஆணையாளாரப் பணியாற்றிதால், சிறுவயதில் இருந்தே பல நகரங்களில் வசித்தார்.

வேலூர் தொழிநுட்பக் கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்தார். தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்த இவரை இயக்குனர் கௌதம்மேனன் தான் தயாரித்த வெப்பம் திரைப்படத்தில் ஹீரோயினாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

bindu-madhavi

இப்படத்தைத் தொடர்ந்து கழுகு , கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், பசங்க 2, ஜாக்சன் துரை என்று பல படங்களில் நடித்தார்.

இந்நிலையில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் எண்ட்ரி ஆனார். படங்களில் நாயகியாக நடித்துக் கிடைத்த புகழைவிட ‘பிக் பாஸ்’ மூலம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பேமஸ் ஆனார் இவர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கு, சினிமாவில் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

புகழேந்தி எனும் நான்

நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருந்த பிந்துவிற்கு கரு. பழனியப்பனின் கதை பிடித்துப் போக அவருக்கு ஓகே சொல்லியிருக்கிறார். அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் தலைப்பு ‘புகழேந்தி எனும் நான்..’ யுகபாரதி பாடல்கள் எழுத, இமான் இசையமைக்க இருக்கிறார். இதனை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி மற்றும் தி போர்த்வால் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம் ஆகப்போகிறது.