Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்காருக்கு போட்டியாக படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யட்டா.! டிவிட்டரில் ரசிகர்களிடம் கேட்ட பிரபல ரவுடி நடிகர்

நடிகர் விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துவருகிறார் படபிடிப்பு தற்பொழுது முடிந்த நிலையில் படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டம் போட்டுள்ளார்கள் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது.
விஜய் முருகதாஸ் கூட்டணி என்றாலே ஹிட் தான் என கூறுகிறார்கள் ஏன் என்றால் இதற்க்கு முன் இவர்களின் கூட்டணியில் கத்தி துப்பாக்கி என இரண்டு மாஸ் படங்களை கொடுத்துள்ளார்கள், சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதால், இந்த படத்துடன் வெளியாக இருந்த சூர்யா திரைப்படம் கடைசி நேரத்தில் தள்ளி போய்விட்டது.
இந்த நிலையில் பல படத்தில் வில்லனாக நடித்த ஆர்.கே.சுரேஷ் தற்பொழுது அஜித் ரசிகராக பில்லா பாண்டி படத்தில் நடித்துள்ளார் அந்த படத்தின் டீசர் வெளியாகிய நிலையில் சர்கார் படத்திற்கு போட்டியாக தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவா.? என ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.வழக்கம் போல இந்த பதிவுக்கு அஜித்-விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் சண்டை போட ஆரம்பித்துள்ளனர்.
