மே 1

உழைப்பாளர்கள் தினமான மே 1-ஆம் தேதி தான் அஜித்தின் பிறந்தநாள். இது தமிழகம் அறிந்த விஷயமே. இவருடைய நடிப்பு, ஸ்டைல் இதனை தவிர்த்து இவரது குணத்திற்கும் சேர்த்தே தனி ரசிகர்பட்டாளமே இருக்கிறது.

பில்லா பாண்டி

billa pandi

ஆர்.கே.சுரேஷ் தற்போது பில்லா பாண்டி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் தீவிர அஜித் ரசிகனாக நடித்துள்ளார் . இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கவுள்ளது படக்குழு.

இந்நிலையில், முன்னர் அறிவித்தது போலவே அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தல புகழ் பாடும் ‘எங்க குல தங்கம், எங்க தல சிங்கம்’ என்ற சிங்கிள் பாடல் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா தன ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.