fbpx
Connect with us

விஜய்யுடன் இணைந்து வேலை செய்வேனா? பில்லா மியூசிக் எப்படி வந்தது? மனம் திறந்த யுவன்..

billa

News / செய்திகள்

விஜய்யுடன் இணைந்து வேலை செய்வேனா? பில்லா மியூசிக் எப்படி வந்தது? மனம் திறந்த யுவன்..

யுவன் இசை என்றால் தனி மரியாதை உண்டு திரை படத்துறையில் அவர் இசையில் மூழ்காதவர் எவரேனும் இருக்கிறார்களா என்ன தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன். இவர் கையில் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது.

யுவன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பல நினைவுகளை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார். அதில் விஜய்யுடன் எப்போது இணைந்து பணியாற்றுவீர்கள்? என்று கேட்டனர்.

அதற்கு அவர் ‘கண்டிப்பாக நான் ரெடி, அவர் சொன்னால் உடனே நடக்கும்’ என கூறினார். அதே போல் பில்லா தீம் மியூஸிக் குறித்து சில தகவல்களை கூறினார்.

முதலில் பில்லா படத்தில் தீம் மியூஸிக் என்பதே இல்லையாம், ‘நான் மீண்டும் நானாக வேண்டும்’ பாடலில் இடையில் வரும் இசையை பார்த்து விஷ்ணுவர்தன் ‘இந்த பீட் ரொம்ப நல்லாருக்கே’ என கூற, அதை அப்படியே தீம் மியூஸிக்காக மாற்றிவிட்டதாக யுவன் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top