fbpx
Connect with us

Cinemapettai

தர்பார் படத்தில் நடிக்க ஆசைப்பட்டு, இயக்குனர் முருகதாஸிடம் ட்விட்டரில் சான்ஸ் கேட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்.

a r murugadoos

News | செய்திகள்

தர்பார் படத்தில் நடிக்க ஆசைப்பட்டு, இயக்குனர் முருகதாஸிடம் ட்விட்டரில் சான்ஸ் கேட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்.

முருகதாஸ் இயக்கத்தில் ரஜனிகாந்த் – நயன்தாரா நடிப்பில் ரெடியாகி வரும் படமே தர்பார்.

தர்பார் படத்தின் ஷூட்டிங் முழு ஸ்பீடில் நடந்து வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் அவர்களை டாக் செய்து பில் ட்யூக் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த நடிகர், தயாரிப்பாளர், ஸ்கிரிப்ட் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் தான் பில் ட்யூக். ஹாலிவுட் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் இவர்.கமாண்டோ பிரிடேட்டர் மற்றும் எக்ஸ் மேன் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயர் எடுத்துக்கொடுத்தது இதுமட்டுமன்றி டிவியிலும் நடித்து, இயக்கியுள்ளார் இவர்.

bill duke

தன் ட்விட்டரில் இவர் தட்டிய ஸ்டேட்டஸ் “முருகதாஸ் அவர்களே எனக்கு தமிழ் பேச வராது . எனினும் ரஜினிகாந்தின் தொலைந்து போன அமெரிக்க உறவினர், நயன்தாராவின் மாமா போன்ற ரோல் செய்யலாம் .. என்னால் நடிக்க முடியும் என பலர் சொல்லியுள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் மற்றும் சந்தோஷ் சிவன் (ஒளிப்பதிவாளர்) எனது காட்சிகளை எடிட் செய்யலாம். அனிருத் ஹிட் ட்யூன் ஒன்று போடலாம், அதில் உலகெங்கிலும் பிரபலமான ஸ்டார்ஸ் பலரை நடிக்கவைக்கலாமா, என்ன நீங்கள் நினைக்கிறீர்கள் ?” என கேட்டுள்ளார்.

இயக்குனர் அவர்களோ அட நிஜமாகவே இது நீங்க தானா என நம்ப முடியாமல் கேட்டுள்ளார் .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top