Connect with us

Cinemapettai

பிகில் படத்தின் வழக்கு அதிரடியாக தள்ளுபடி செய்த நீதிபதி.! காரணம் தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம்

bigil-vijay-gift

Cinema News | சினிமா செய்திகள்

பிகில் படத்தின் வழக்கு அதிரடியாக தள்ளுபடி செய்த நீதிபதி.! காரணம் தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம்

விஜய் படம் என்றாலே பிரச்சனையில் ஆரம்பித்து  பிளாக்பஸ்டரில் முடியும். அந்தவகையில் தற்போது அட்லி இயக்கத்தில் மிக பிரம்மாண்ட பிகில் திரைப்படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது. இதற்கான அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்து புரோமோஷன் வேலைகள் போய்க் கொண்டிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் கே.பி.செல்வா என்பவர் பிகில் படத்தின் கதை என்னுடையது என்று வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்தக் கதை ஏற்கனவே எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பதிப்புரிமையை மீறுவதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பு மற்றும் படம் திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் புகாரில்  தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிராக அட்லி மற்றும் தயாரிப்பாளர் நிறுவனமான ஏ.ஜி.எஸ் படக்குழுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் வழக்குக்கு முக்கியமான காரணமே  எதுவுமே இல்லை ஆகையால் வழக்கை தள்ளுபடிசெய்யுங்கள் என்று கேட்டுள்ளனர்.

அட்லியின் தரப்பில் வாதங்கள் மிகக் கடுமையாக இருந்ததால் வழக்கை கே.பி.செல்வா திரும்பப் திரும்பப் பெறுவதற்கு அனுமதி கோரியும், புதிதாக ஒரு வழக்கு தொடுக்க அனுமதி கேட்டும் விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்தார்.

வழக்கை திரும்பப் பெறுவதற்கு அனுமதித்த நீதிபதி மீண்டும் புதிய வழக்கு தொடர்வதற்கு அனுமதி வழங்க மறுத்து விட்டார். இறுதியில் வழக்கை வாபஸ் பெற்றதன் பெயரில் தள்ளுபடியும் ஆனது. பிகில் கண்டிப்பாக வரும் தீபாவளி அன்று மிகப்பெரிய கொண்டாட்டத்தில் வெளிவரும் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top