Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகில் படத்திற்கு 4 நாட்களுக்கு டிக்கெட்டே கிடைக்காது.. புக்கிங்கில் பிகில் வரலாற்று சாதனை
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள பிகில் படத்திற்கு முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விளையாட்டை மையமாக வைத்து பிகில் வெளியாகி உள்ளது.
இந்த தீபவாளிக்கு விஜய் ரசிகர்களுக்கு பிகில் படம் பெரிய ட்ரீட்டாக இருக்கும் என சமூக வலைத்தளங்களில் பலரும் நல்ல விமர்சனங்களை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிகில் படத்தின் புக்கிங் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வேகமாக நிரம்பி வருகிறது. அனைத்து மல்டி பிளக்ஸ் அனைத்திலும் டிக்கெட் புக் செய்யப்பட்டுவிட்டது. பி மற்றும் சி செண்டர்களில் வேகமாக படம் நிரம்பி வருகிறது. விஜய் படங்களில் மிகப்பெரிய ஒபனிங் பிகிலுக்கு கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள்.
எந்திரன் மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களுக்கு நிகராக வேகமாக புக்கிங் நிகழ்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஷோ அனைத்தும் புக் ஆகிவிட்டது. திங்கள் கிழமையும் அரசு விடுமுறை என்பதால் அன்றைய ஷோவும் மொத்தமாக நிரம்பி வருகிறது. திங்கள் கிழமை இரவு காட்சி வரை படம் முழுமையாக புக் ஆகிவிட்டது. பிகில் படம் வேகமாக, நிரம்பி வருவதால் சில தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் போடப்பட்டு வருகிறது.
