Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகில் புக்கிங் ஆகுது.. ஆனால் யாரும் திரையரங்கு வருவதில்லை.. ஷாக் தகவல்
தீபாவளி பண்டிகை காலங்களை ஒட்டி 25ம் தேதி அன்று பிகில் கைதி என இருபடங்கள் வெளியானது. இதில் தற்போது பிகிலை விட கைதி மக்களின் கவனத்தை பெரிதும் பெற்றதாக சொல்லி பல திரையரங்குகள் பிகிலை தூக்கிவிட்டு கைதி படத்தை திரையிட்டு வருகிறார்கள். முதல் நாளில் 250 திரையங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட கைதி தற்போது 400க்கும் மேல் திரையிடப்பட்டுள்ளது.
இருந்தாலும் பிகில் திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து வருவதாக கூறுகிறார்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக. பிகில் திரைப்படம் திரையிட்டு வரும் திரையரங்குகளின் முன்பதிவு புகைப்படங்களை தளபதி விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
ஆனால் பல திரையரங்குளில் மக்கள் யாரும் வராததால் காட்சிகளை நீக்கி வருகின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள். சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு உரிமையாளர் பிகில் வசூல் குறித்து கூறுகையில்,
பிகில் படம் வெளியான 5வது நாளிலே பல திரையரங்குகளில் மக்கள் நடமாட்டம் குறைஞ்சு போனது. எங்கள் திரையரங்கில் பொதுவாக ஆன்லைன் முன்பதிவுகள் இல்லை. 25ம் தேதி வெளியான விஜயின் பிகில் படத்தை பார்க்க வந்த ரசிகர்களில் சிலர். திரையரங்குகளில் டிக்கெட் எடுக்க கடினமாக உள்ளது ஆன்லைன் முன்பதிவுகளை தொடங்குமாறு கோரிக்கை விடுத்தனர். ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ஆரம்பித்தோம்.
ஆனால் தொடங்கிய இரண்டு நாட்களுக்கு காட்சிகள் நிறைந்தது. 29ம் தேதி காட்சிகள் ஆன்லைனில் நிறைந்தது. ஆனால் படம் பார்க்க வந்தவர்கள் 5பேர்தான். பின்புதான் எங்கள் திரையரங்க மேனேஜர் கூறினார். ஆன்லைனில் முன்பதிவுகளை காட்டித்தான் ரசிகர்கள் இணையதளத்தில் கொண்டாடி வருகின்றனர் என்று. படத்தின் முன்பதிவுகளை ரசிகர் மன்றமே மொத்தமாக முன்பதிவு செய்துவிட்டனர் என்று.
வெறும் 5நபர்களுக்காக என்னால் காட்சி திரையிட முடியாது என்பதால் அந்த காட்சியை நிறுத்திவிட்டோம். வந்த 5நபர்களுக்கு மட்டும் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டோம். எங்கள் திரையரங்கில் நடந்தது இதுதான். மற்ற திரையரங்குகளை பற்றி தெரியாது என்றார்.
