Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகில் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. பட்டாசாக தெறிக்க விடப் போகும் ரசிகர்கள்
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.
கல்பாத்தி எஸ் அகோரம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் வீட்டில் திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அண்மையில் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமான முறையில் சென்னையில் நடைபெற்றது.
இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்துள்ளார். இன்னொரு மெர்சலான வேடத்திலும் நடித்துள்ளார்.
பிகில் படத்தின் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் டிரைலரின் சவுண்ட் மிக்ஸிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எனவே விரைவில் பிகில் எதிர்பார்க்கலாம்.
அத்துடன் பிகில் திரைப்படத்தின் சென்சார் காப்பியும் தயாராகி வருகிறது. குறைந்தபட்சம் பிகில் திரைப்படம் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு படம் சென்சாருக்கு அனுப்பி விடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தின் வெளிநாட்டு உரிமை களும் ஒரு வாரம் முன்பு இறுதி செய்யப்படும் ண என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் டிரைலர் வரும் என்பதால் ரசிகர்கள் பட்டாசு போல் தெறிக்க விடுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
