Tamil Cinema News | சினிமா செய்திகள்
வழக்கம்போல் புரளியைக் கிளப்பிய நெட்டிசன்கள்.. பிகில் எந்த படத்தில் இருந்து எடுக்கப்பட்டது?
தளபதி விஜய் நடித்த பிகில்படத்தின் டிரைலர் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் லைக்குகள், 24 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வையாளர்கள் என பழைய யூட்யூப் ரெக்கார்டு எல்லாம் அடித்து தூக்கியது அனைவரும் அறிந்ததே.
ட்ரெய்லர்லையே ஏகப்பட்ட ட்விஸ்ட் வைத்த அட்லியின் இந்த படத்திற்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைவரும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம்போல் நல்லது ஒன்று நடந்தால் கேட்டது ஒன்று இருக்கும் என்பதைப் போல தளபதி விஜய் மற்றும் அட்லியின் விரோதிகளான மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இந்த படம் ஷாருக்கான் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான சக்தே இந்தியா என்ற ஹிந்தி படத்தின் காப்பி என கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்து வருகின்றனர்.
அதைவிட கொடுமை என்னவென்றால் அட்லியின் ஆஸ்தான இயக்குனரான ஷங்கரின் ஜென்டில்மேன் படத்தின் காப்பி என ஒரு கூட்டம் அலறிக்கொண்டு உள்ளது.
எது எப்படியோ படத்தின் டிரைலர் ஏற்கனவே ஹிட் அடித்து வைரலாகி வருகிறது. கண்டிப்பாக இந்த படத்தின் வசூல் விஜய்யின் பழைய படங்களுக்கு ஒரு படி மேல் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
