Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகில் கதை காப்பியா.. அட்லி விளக்கம்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிகில் கதை தன்னுடையது என்றும், அதை திருடி விட்டனர் என்றும் உதவி இயக்குனர் செல்வா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். காப்புரிமை வழக்கு தொடர அவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதுஒரு புறம் எனில் ஏற்கனவே அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படம் மணிரத்னத்தின் மவுன ராகம் தழுவல் என்றும், தெறி படம் சத்ரியன் தழுவல் என்றும், மெர்சல் படம் அபூர்வசகோதரர்கள் தழுவல் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
பிகில் படத்தை ஷாருக்கான் நடிப்பில் வெளியான சக் தே இந்தியா இந்தி படத்தோடு ஒப்பிட்டு பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு அட்லி பதில் அளித்துள்ளார்.“நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். பிகில் படத்தின் கதை என்னுடையது. இவர்கள் சொல்லும் படங்களை நானும் பார்த்து உள்ளேன். ஆனால் அந்த படங்களின் பாதிப்பால் என் கதையை நான் எழுதவில்லை” என அட்லி கூறியுள்ளார்.
