Connect with us

Cinemapettai

‘இதுக்குப் பெயர் தான் வெறித்தனம்’ கடைசி 5 மணி நேரத்தில் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த விஜய் ரசிகர்கள்

bigil-verithanam-record

Tamil Cinema News | சினிமா செய்திகள்

‘இதுக்குப் பெயர் தான் வெறித்தனம்’ கடைசி 5 மணி நேரத்தில் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த விஜய் ரசிகர்கள்

பிகில்’ படத்தின் ‘வெறித்தனம்’ பாடல் வெளியான 24 மணி நேரத்தில், உலகளவில் பெரும் சாதனை படைத்துள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் பிகில் படத்தை அட்லீ இயக்கி உள்ளார். தளபதி விஜய், நயன்தாரா, கதிர், யோகிபாபு , இந்துஜா, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் முதலில் ‘சிங்கப்பெண்ணே’ பாடலை படக்குழு வெளியிட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, தற்போது விஜய் பாடியுள்ள ‘வெறித்தனம்’ பாடல் நேற்று (செப்.1) மாலை 6 மணியளவில் இணையத்தில் வெளியான இந்தப் பாடல் உலகளவில் பெரும் சாதனை படைத்துள்ளது. உலகளவில் கடைசி 24 மணி நேரத்தில் அதிகம் பேர் பார்த்த பாடல்கள் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது ‘வெறித்தனம்’ பாடல்.

42 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து, சுமார் 7 லட்சம் பேர் இப்பாடலுக்கு விருப்பம் தெரிவித்து உள்ளார்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இதர மொழி பாடல்களைப் பார்த்தால், எந்தவொரு பாடலுமே இவ்வளவு பேர் விருப்பம் தெரிவிக்கவே இல்லை.

இந்தப் படத்தின் இசை உரிமையைக் பெற்றுள்ள சோனி நிறுவனம், இந்தச் சாதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது . ஏஜிஎஸ் நிறுவனமும் ‘இதுக்குப் பெயர் தான் வெறித்தனம்’ என்று ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top