Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகில் ஐந்தாவது நாளில் படுத்துவிட்டது.. வசூல் எல்லாம் பொய்.. பிரபல தயாரிப்பாளர் பேட்டி
பிகில் படத்தின் கலெக்ஷன் பற்றி அனைவரும் ஆள் ஆளுக்கு நூறு கோடி, 200 கோடி என அடித்துவிட ஒரு தயாரிப்பாளர் உண்மை நிலவரத்தை புட்டுப்புட்டு வைத்துள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் ராஜன் எதற்கும் கவலைப்படாத, பயப்படாத ஒரு மனுஷன். உண்மையான நிலவரத்தை அடிக்கடி வீடியோவாக வெளியிட்டு பத்திரிகைகளின் கற்பனை கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பவர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்
பிகில் படத்தின் வசூல் முதல் நான்கு நாட்கள் நன்றாக சென்றது. ஆனால் ஐந்தாவது நாளில் படுத்து விட்டது என ஒரு பேட்டியில் கூறி அதிர்ச்சி அளித்தார். இந்த செய்தியை கேட்ட பலர் ஆச்சரியமடைந்தனர். ஆச்சரியத்தை விட பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றே கூறலாம்.
அடுத்து அட்லீயை வச்சி செய்தார். அதாவது அட்லீ செய்த செலவுகள் மிகவும் அதிகமாம். தேவை இல்லாத செலவை அதிகமா ஏற்றிவிட்டார் எனவும், இந்த வசூலை நமது ஊர் தியேட்டர்களை வைத்து திரும்ப எடுக்கவே முடியாது என்றும் கூறினார்.
அதே நேரம் சமீபத்தில் வெளிவந்த கைதி படம் குறைந்த செலவில் படம் எடுக்கப்பட்டு மிகப்பெரிய லாபத்தை கொடுத்ததாகவும், பிகில் படத்தின் தியேட்டர்களின் எண்ணிக்கையை குறைத்து கைதி படத்தின் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறினார். கைதி படத்தின் இயக்குனருக்கு நன்றியை கூறினார்.
இதுபோல கற்பனையான வசூல் நிலவரங்களை வெளியிட வேணாம் எனவும் கூறினார். மேலும் 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களில் அதிக வசூல் மற்றும் லாபம் கொடுத்த படங்கள் எது என்ற கேள்விக்கு கூறிய பதில் மேலும் ஆச்சரியப்படுத்தியது. அதாவது விஸ்வாசம், நேர்கொண்டபார்வை, பேட்ட போன்ற மூன்று படங்கள் மட்டுமே நல்ல வசூல் செய்தது என்றும் தெரிவித்துள்ளனர்.
