Connect with us

Cinemapettai

லீக்கானது பிகில் பட காட்சி.. ரேஸில் தூள் கிளப்பியபடி செல்லும் விஜய்

bigil-shooting-spot-video

Cinema News | சினிமா செய்திகள்

லீக்கானது பிகில் பட காட்சி.. ரேஸில் தூள் கிளப்பியபடி செல்லும் விஜய்

சென்னை ரெட் ஹில்சில் பிகில் படத்தின் சூட்டிங்கிற்காக எடுக்கப்பட்ட விஜய் செல்லும் ரேஸ் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெறி, மெர்சல்லை தொடர்ந்து அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நயன்தாரா, ரெபா மோனிகா ஜான், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி பிகில் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், பிகில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், விஜய் வேகமாக பைக் ஓட்டி வருகிறார். இந்தக் காட்சி சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top