Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகில் வசூல்.. 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா.. ரஜினிக்கு பிறகு விஜய்க்கு பெரும் கௌரவம்
பிகில் படம் ரிலீஸான முதல் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் ஆகி உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தீபாவளி விருந்தாக கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது பிகில் திரைப்படம். ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
பிகில் படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் பிகில் படம் வெற்றிநடை போட்டு வருகிறது.படம் குறித்து நெகட்டிவான விமர்சனங்கள் வந்த போதிலும் படம் ரிலீஸான முதல் மூன்று நாட்களில் உலகம் முழுக்க 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக நேற்று தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் பிகில் படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு பிறகு 4 நாட்களில் 150 கோடி ரூபாயை குவித்திருக்கிறது என்றால் அது விஜயின் பிகில் படம் தான் என்று சொல்கிறார்கள்.
இந்தியளவில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படங்களில் அதிக வசூலை குவித்து பிகில் படம் டாப் 5ல் முதல் இடத்தை பிடித்திருக்கிறதாம். இதை கேள்விப்பட்டு விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ளனர்.
