fbpx
Connect with us

Cinemapettai

பிகில் 20 கோடி நஷ்டமா? பெரிய லாபமே அந்தப் படம்தான் என்ற அர்ச்சனா.. பதிலடி கொடுக்கும் தளபதி ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிகில் 20 கோடி நஷ்டமா? பெரிய லாபமே அந்தப் படம்தான் என்ற அர்ச்சனா.. பதிலடி கொடுக்கும் தளபதி ரசிகர்கள்

சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்படும் நிகழ்வாக இருந்தது பிகில் 20 கோடி நஷ்டம் என்பது தான். ஆனால் பிகில் படம் வெளியான பிறகு நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் பிகில்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக வருமான வரித் துறையினர் அதிகார பூர்வமாக அறிக்கை வெளியிட்டனர்.

இருந்தும் விஜய்யை பிடிக்காத மற்ற சில ரசிகர்கள் பிகில் நஷ்டம் தான் எனவும், அதனால் தான் ஏஜிஎஸ் நிறுவனம் அதற்கு அடுத்தது எந்த படமும் தயாரிக்கவில்லை எனவும் பல்வேறு கதைகளை கட்டி வந்தனர்.

அதிலும் முக்கியமாக பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் பிகில்படம் 20 கோடி நஷ்டம் எனவும், அதனால் மீண்டும் விஜய்யிடம் கால்ஷீட் கேட்டு ஏஜிஎஸ் நிறுவனம் முறைகேடு செய்வதாகவும் செய்திகள் வெளியிட்டன.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த செய்தி போலி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் பிகில்படம் தங்களுக்கு பெரிய லாபம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

archana-tweet

archana-tweet

இதனால் தற்போது பலர் திருடனுக்கு தேள் கொட்டியது போல் அமைதியாக உள்ளனர். 2019ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் விஜய் நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் பிகில் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top