Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம்
Published on
விஜய் நடித்துள்ள பிகில் படத்தை சிறப்பு காட்சி திரையிட அனுமதிக்க கோரி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறது.
வழக்கமாக பண்டிகை காலங்களில் திரைப்படங்கறை சிறப்பு காட்சி வெளியிட அரசு அனுமதி அளிக்கும். ஆனால் இந்த முறை பிகில் மற்றும் கைதி திரைப்படங்களுக்கு அரசு சிறப்பு காட்சி வெளியிட அரசு அனுமதி மறுத்துவிட்டது.
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கவே சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என உறுதி அளித்தால் அசு பரிசீலக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏற்கெனவே கூறியிருந்தார்.
இந்நிலையில் பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
