Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகில் படத்தின் கதை திருட்டு.. இயக்குனர் செல்வா பேஸ்புக்கில் உருக்கமான வேண்டுகோள்
பிகில் படத்தில் தொடரும் சர்ச்சைகளால் விஜய் ரசிகர்களுக்கு போதும் போதும் ஆகிவிட்டது. தற்பொழுது உதவி இயக்குனர் செல்வா என்பவர் கோர்ட்டில் கதை எனது என வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை ஐகோர்ட் தீர்ப்பைதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
தயாரிப்பு தரப்பும் இயக்குனர் அட்லி தரப்பும் அவர் அறிக்கை வெளியிட்டதில் பணத்திற்காகவும் விளம்பரத்திற்காகவும் சில பேர் வழக்கு தொடர்வது வழக்கம் என கூறுகிறார்கள். ஆனால் உதவி இயக்குனர் செல்வா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் கதையை சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்து அவரிடமிருந்து நமக்கு அழைப்பு வராதா நான் இயக்குனராக மாட்டேனா என எத்தனையோ கனவுடன் காத்துக்கொண்டிருந்தேன்.
சென்ற தீபாவளிக்கு இதைப்பற்றி நான் புகாராக தெரிவித்தேன். எழுத்தாளர் சங்கத்திலும் தெரிவித்தேன் எந்த நடவடிக்கையும் இல்லை. வழக்கு போட்டேன் என்னைப் போன்ற உதவி இயக்குனர்களின் வலி யாருக்குத்தான் தெரியும் என சில விஷயங்களை கூறி அவரின் மன வலிகளை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
உண்மையில் என்னதான் நடக்கிறது சினிமாவில் தொடர்ந்து அட்லீ படங்களுக்கு விஜய் படங்களுக்கும் இந்த பிரச்சினை வருவது உண்மையாக கதை திருட்டு மூலம் வருகிறதா இல்லை விளம்பரத்துக்காக வருகிறதா ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
