Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட்லீ செய்த கோளாறுகள்.. ஏஜிஎஸ் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் தீபாவளிக்கு வரும் திரைப்படம் பிகில். இந்த படத்திற்கு எக்கச்சக்கமாக செலவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் எக்கச்சக்க பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறது.
இது ஒருபுறமிருக்க. இந்தப் படம் இந்தி படத்தின் தழுவல் என கூறினார்கள். மறுபக்கம் உதவி இயக்குனர் செல்வா என்ற ஒருவர் கோர்ட்டில் கதை எனது என வழக்குகள் கொடுத்துள்ளார். கோர்ட்டும் தீர்ப்பை வழங்காமல் ஒத்திவைத்துள்ளது. இதையெல்லாம் பார்த்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனா போதும் போதும் சினிமா தயாரிப்பு என முடிவுக்கு வந்துவிட்டார்.
இதற்கெல்லாம் யார் காரணம் என யோசிக்க வேறு யார் அட்லீ தான். ஏற்கனவே சொன்ன பட்ஜெட்டை விட பலமடங்கு ஏற்றியதால் அவர் சம்பளத்தில் சில கோடிகளுக்கு ஏஜிஎஸ் நிறுவனம் செக் வைத்துள்ளது.
இதனால் கடுப்பான அட்லீ ஏஜிஎஸ் நிறுவனம் மீது கோபத்தில் உள்ளார். இந்த மாதம் 25 ஆம் தேதி பிகில் படம் திரைக்கு வருகிறது. இன்னும் ஆறு நாட்கள் உள்ள நிலையில் எந்த பத்திரிகைகளிலும் இந்த படத்தின் விளம்பரம் தியேட்டர்களில் பெயர்களோ இதுவரை வரவே இல்லை.
பிகில் உடன் மோதும் கைதி பத்திரிகைகளில் விளம்பரம் வந்து விட்டது. பிகில் எப்போ வருமோ? என விஜய் ரசிகர்கள் பத்திரிகைகளைப் புரட்டி கொண்டுள்ளனர்.
