Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகில் படத்தின் கேரளா உரிமையை வாங்கிய பிரபல நடிகர்..
இன்று இருக்கும் தமிழ் சினிமா நடிகர்களில் தென்னிந்திய முழுவதும் அதிக மார்க்கெட் கொண்ட நடிகர் யார் என்றால் மாஸ் ஸ்டார் விஜய். தற்போது தீபாவளிக்கு ரிலீசாகும் பிகில் படத்தின் கேரளா உரிமையை பிரபல நடிகர் பிரிதிவிராஜ் வாங்கியுள்ளார்.
கேரளாவில் விஜய்க்கு தனி மார்க்கெட்டை உண்டு. அதுமட்டுமில்லாமல் கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை நயன்தாரா. இந்தப் படத்தில் நடிப்பதால் கேரளாவில் மிகப் பெரும் வரவேற்பை இந்த படம் பெறப் போகிறது.
இந்தப் படத்தின் டிரைலர் மட்டும் பல சாதனைகள் படைத்துள்ளது. டிரைலர் இப்படி சாதனை என்றால் இந்தப் படத்திற்கு எந்த அளவுக்கு கேரளா ரசிகர்களிடம் ஓபனிங் கிடைக்கும்.
இதையெல்லாம் பார்த்த நடிகர் பிருத்விராஜ் கேரளா உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளார். இதைக் கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் பிரித்திவிராஜ்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
