Tamil Cinema News | சினிமா செய்திகள்
‘பிகில்’ காட்சி ரத்து விவகாரம்.. தேவி திரையரங்க நிர்வாகம் விளக்கம்
சென்னை: ‘பிகில்’ காட்சி ரத்து செய்யப்பட்தாக சமூக வலைதளங்களில் உள்நோக்கத்துடன் செய்திகள் பரபப்படுவதாக தேவி திரையரங்க நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.
அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பிகில்’. 180 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவானது. இந்த திரைப்படத்தின் பகல் காட்சி தேவி திரையரங்களில் ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தேவி திரையரங்கம், “இது உள்நோக்கத்துடன் பரப்பப்படும் தவறான செய்தி. நாங்கள் ‘பிகில்’ படத்தைத் தேவி மற்றும் தேவி பாரடைஸ் என்ற இரண்டு பெரிய திரைகளில் திரையிடுகிறோம். தேவி 900 இருக்கைகளும், தேவி பாரடைஸ் 1100 இருக்கைகளும் கொண்டவை.
பொதுவாக ஒரு மல்டிப்ளெக்ஸில் 200 முதல் 250 சீட்கள் வரை மட்டுமே இருக்கும். எங்களுடைய சீட் எண்ணிக்கையைக் கற்பனை செய்து பாருங்க. ஒரு மல்டிப்ளெக்ஸின் ஒரு வாரத்துக்கான வசூல் எங்களுக்கு ஒரு நாளிலேயே கிடைச்சிடும். இப்படி தகவல்களை பரப்புபவர்களால் டிக்கெட் நியூ தளத்தை திறந்து தேவி மற்றும் தேவி பாரடைஸின் ரிசர்வேஷன்களை பார்க்க முடியாதா? டிக்கெட்டுகள் விற்றுக் கொண்டுள்ளது.
இரண்டு பட தயாரிப்பாளர்களிடம் பேசி இரண்டாம் வாரத்தில் ’பிகில்’ படத்தைத் தேவியிலும் ’கைதி’ படத்தைத் தேவி பாரடைஸிலும் திரையிடுகிறோம்.
முதல் வாரத்தில் இரண்டு பெரிய திரைகளிலுமே ’பிகில்’ படத்தைத் திரையிட்டு உள்ளோம். இரண்டாம் வாரத்தில் ’கைதி’க்கு ஒரு பெரிய திரையை ஒதுக்கினோம். இரண்டாம் வாரத்தில் ’பிகில்’ திரைப்படம் தேவி மற்றும் தேவிகலாவில் திரையிடப்படும். மொத்தம் 8 காட்சிகள்” என்று கூறியுள்ளது.
