Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்னது பிகில் படத்தின் பிசினஸ் 200 கோடியா? அடேங்கப்பா! கலக்கும் தளபதி
இன்று தமிழ்நாட்டின் முக்கிய செய்தியாக இருப்பது தீபாவளிக்கு வரும் பிகில் படம்தான். தீபாவளி பண்டிகையை புறந்தள்ளி உள்ளது. விஜய் அட்லீ கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம். ஏற்கனவே இரண்டு படங்கள் வசூலில் சாதனை படைத்தது.
அதனால் அந்த அளவுக்கு இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது. அனேகமாக எல்லா தியேட்டர்களிலும் புக்கிங் திறந்துவிடப்பட்டுள்ளது. இப்பொழுது என்னவென்றால் இந்தப் படத்தை ஒட்டு மொத்தமாக 200 கோடி ரூபாய்க்கு ஏஜிஎஸ் நிறுவனம் பிசினஸ் செய்துள்ளது.
ஏரியா வாரியாகவும் மற்ற மொழிகளிலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஹிந்தி வெளிநாட்டு உரிமைகள் சாட்டிலைட் ஆடியோ ரைட்ஸ் ஓவர்சீஸ் ரைட்ஸ் என ஒட்டுமொத்தமாக 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இந்த வசூலை பார்க்கும்பொழுது தமிழ்நாட்டின் ரஜினிக்குதான் இந்த வியாபாரம் இருந்தது. அதன் பிறகு விஜய்க்கு தான் மாஸ் ஓபனிங், மாஸ் வியாபாரமும் நடந்துள்ளது. இதேபோல் தியேட்டர் புக்கிங்கிலும் பிகில் படம் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
