Tamil Nadu | தமிழ் நாடு
பிகில் டிக்கெட் விலையை விட பஸ் டிக்கெட்டின் விலை அதிகம்.. இதற்கு பதில் சொல்லுமா அரசு?
நாளை முதல் உலகமெங்கும் பிரம்மாண்டமாக தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெளியாக இருக்கிறது. சமீபகாலமாக விஜய் படம் என்றாலே அரசியல்வாதிகளின் தலையீடு சற்று தூக்கலாக இருந்து வருகிறது. இதற்கு முதல்முதலில் விதை போட்டது தலைவா திரைப்படம்.
Time To Lead என்ற ஒற்றை வார்த்தைக்காக அன்றைக்கு ஆட்சியில் இருந்த ஜெயலலிதா அம்மையார் அவர்கள் படத்தை வெளியிடாமல் தடை செய்து படத்தின் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தினார். இந்த படத்தில் இருந்து இறுதியாக நடித்த சர்கார் படம் வரை அரசியலைப் பற்றி கருத்துக்கூறி வந்தார், விஜய்.
இதனால் தற்போது பிகில் படத்திற்கு சிறப்பு காட்சிகள் வழங்க முடியாது என்றும், டிக்கெட் விலையை விட அதிகமாக விற்கும் திரையரங்குகளுக்கு உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அறிக்கை விட்டு வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தளபதி ரசிகர்கள், பொழுதுபோக்கு விஷயங்களுக்கு இவ்வளவு பேசும் அரசியல்வாதிகள் ஏன் பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்கள் அதிகமாக விற்கப்படுவதை கண்டிக்கவில்லை என குரலெழுப்பி வருகின்றனர்.
இதனை அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆதரிக்கும் வகையில் நேற்று டிவிட்டரில் #ReduceDiwaliBusFare என்ற ஹேஷ்டேகை உருவாக்கி ட்ரண்ட் செய்து வந்தனர். இதனைப்பற்றி தற்போது வரை அரசியல்வாதிகளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்பது வருத்தமாக உள்ளது.
