Connect with us

Cinemapettai

பிகில் ரிலீஸ் தேதி உறுதி.. தளபதி ரசிகர்கள் எதிர்பார்த்த தினமே நடந்துவிட்டது

Vijay-Thalapathy-Sarkar-Bigil

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிகில் ரிலீஸ் தேதி உறுதி.. தளபதி ரசிகர்கள் எதிர்பார்த்த தினமே நடந்துவிட்டது

இயக்குனர் அட்லீயின் அடுத்த படைப்பான பிகில்  படத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வருகிறார். பெண்களை மையப்படுத்தி மற்றும் விளையாட்டுக் களமாக கொண்டுள்ள இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளிவந்து  இணைய தளத்தை தெறிக்க விட்டது.

இது மட்டுமல்லாமல் வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. இதற்காக சென்சார்  அக்டோபர் முதல் வாரம் முடிக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தளபதி விஜய்யின் டப்பிங் வெகுவிரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  ஏ ஆர் ரகுமான் பின்னணி இசைக்காக வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் அதுவும் முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த படம் மிகச் சிறப்பாக வந்துள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் இயக்குனர் அட்லிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top