fbpx
Connect with us

விஜய்க்கு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட பிகில் பட தயாரிப்பாளர்.. முரட்டு ரசிகரா இருப்பாரோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்க்கு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட பிகில் பட தயாரிப்பாளர்.. முரட்டு ரசிகரா இருப்பாரோ

இளைய தளபதி விஜய் பிறந்தநாளையொட்டி பல பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில் பிகில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாதி ட்விட்டர் பக்கத்தில் ஒரு வைரல் வீடியோ பதிவிட்டுள்ளார்.

இளைய தளபதி விஜய் தனது 45வது பிறந்தநாளை ஜூன்( 22 ) தேதி கொண்டாடி வருகிறார். விஜய்யின் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல பிரபலங்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

தளபதி விஜயின் பிறந்தநாள் முன்னிட்டு நேற்று 6 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று 12 மணிக்கு செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் தளபதி விஜய் மைக்கல் எனும் டீசர்ட் அணிந்து கால்பந்தாட்டத்தில் விளையாடுவது போலவும் அவரது தந்தையாக மற்றொரு விஜய் வேஷ்டி சட்டையுடன் ரௌத்தரமாக அமர்ந்திருப்பது போல போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை பார்க்கும் போது தந்தையாக நடிக்கும் விஜய் ரவுடி நடிப்பார் என தெரிகிறது. அவரது மகன் விஜய் கால்பந்தாட்டத்தில் விளையாடி வருவது போல் வடிவமைத்துள்ளனர். தற்போது பிகில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரசிகர்கள் இளைய தளபதி விஜய் பற்றி தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top