Connect with us

Cinemapettai

bigil-vijay-singer

Cinema News | சினிமா செய்திகள்

பிகில் அப்டேட்.. விஜய் ரசிகர்கள் பொறுமையை சோதிக்கும் தயாரிப்பாளர்

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் பிகில். இப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பல திரை பிரபலங்களும் திரையில் காண காத்திருக்கின்றனர். இப்படத்தைப் பற்றிய தகவல்களை ரசிகர்கள் அவ்வப்போது சமூகவலைதளங்களில் தயாரிப்பாளரிடம் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிகில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி இன்று மாலை 6 மணிக்கு பிகில் படத்தை பற்றிய அப்டேட் உள்ளது. ஆனால் இப்படத்தின் சிங்கிள், டீசர், டிரைலர், ஆடியோ லான்ச் மற்றும் படத்தின் ரிலீஸ் டேட் பற்றிய தகவல் கிடையாது. ஆனால் சூப்பர் அப்டேட் உள்ளது என ட்விட் செய்துள்ளார்.

விஜய் ரசிகர்கள் கேட்கும் கேள்வி ஒன்றுதான் இந்த அப்டேட்டை காலைலேயே சொல்லி இருக்கலாமே. டீசர், ட்ரைலர், போஸ்டர், இதெல்லாம் ரெடி ஆகுறதுக்கு டைம் எடுக்கலாம் அதனால் ஆறு மணி என நேரம் சொல்லலாம், ஆனால் விஜய் பாடபோகிறார் என்று முன்னாடியே தெரியாதா? இதற்காக சாயங்காலம் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டுமா? காலைலேயே சொல்லி இருந்தால் இந்நேரம் உலகம் முழுக்க பல ஹேஷ் டேக் ட்ரென்ட்டிங் ஆயிருக்கும். காலையில் இருந்து காத்திருந்த ரசிகர்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top